வெளிநாட்டுக் கல்விக்கு வங்கியில் கடன் பெற முடியுமா? | Kalvimalar - News

வெளிநாட்டுக் கல்விக்கு வங்கியில் கடன் பெற முடியுமா? ஜூன் 27,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

முடியும். இதை கல்வி முடிந்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். 15 லட்ச ரூபாய்க்கு மேலான கடன்களை 7 முதல் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம்.

இதைப் பெற தேவைப்படும் ஆவணங்கள் இவை தான்.
* நிரப்பப்பட்ட பாங்குகளின் கடன் விண்ணப்பம்
* நிரந்தர முகவரிக்கான சான்றிதழ்
* விசா மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் அட்டெஸ்டட் நகல்கள்
* வயது சான்றிதழ்
* பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள்
* விண்ணப்பிக்கும் முன் படித்திருக்கும் தகுதிப் படிப்பின் அனைத்து செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்கள்
* வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான அனுமதி அல்லது சேர்க்கைக் கடிதம்
* அந்த பல்கலைக்கழகத்தின் விபரங்களடங்கிய ஏடு மற்றும் முழு கட்டண விபரம்
* கடன் பெறுவதில் கோ-பாரோயராக கையெழுத்திடுபரின் சொத்து மற்றும் பொறுப்பு விபரம்
* 4 லட்சத்திற்கு மேல் கடன் கோருபருக்காக கையெழுத்திடும் கியாரன்டர் பற்றிய விபரங்கள் மற்றும் ஈடாகத் தரப்படவிருக்கும் சொத்து விபரங்கள்.

இந்தக் கடனை எதற்கெல்லாம் பெறலாம் தெரியுமா? விமானப் பயண கட்டணம், விடுதிச் செலவுகள் அல்லது தங்கும் செலவுகள், கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், ஆய்வகக் கட்டணம், காஷன் டெபாசிட், புத்தகங்களின் செலவு, கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களின் செலவு, திட்டச் செலவு, கல்விப் பயணச் செலவு, ஆய்வறிக்கைச் செலவு ஆகியவற்றுக்கு இதைப் பெறலாம். பொதுவாக 4 முதல் 5 லட்சம் வரையிலான கடன்களுக்கு மார்ஜின் பணம் நாமே கட்டத் தேவையில்லை. ஆனால் இதற்கு மேலான தொகைக்கு கட்டாயம் மார்ஜின் செலுத்த வேண்டும்.

இன்றைய சூழலில் வெளிநாட்டுக் கல்விக்கு ஈடான தரத்தில் நம் நாட்டிலேயே பல கல்வி நிறுவனங்கள் சிறப்பான கல்வியைத் தருகின்றன. சொல்லப்போனால் நம் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் கல்வி பெற வெளிநாட்டு மாணவர்கள் கூட வருகின்றனர். எனவே உங்களது குடும்பச் சூழலை மனதில் கொண்டு முடிவு செய்யவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us